சில வருடங்களுக்கு முன் பேக்கேஜ் டூர் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வட கிழக்கு இந்திய பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் சென்றோம். அஸ்ஸாம் சென்றடையும் போதே கன மழை துவங்கியது. தட்டு தடுமாறி வயதானவர்களையும் அழைத்துக் கொண்டு தங்கும் அறைக்கு சென்று மதிய உணவினை சுவைத்து வந்தோம். சில மணி நேரங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு அருகாமையிலுள்ள ஆற்றினை ரசித்துக் கொண்டிருந்த அத்தருணம் திடீரென காற்றாற்று வெள்ளம் போல் பாய ஆரம்பித்தது அந்த அருவி. அதன் பின் தான் தெரிந்தது கடந்த ஒரு வாரமாகவே கன மழை பெய்து வருகின்றது என. இரவு உணவுக்காகக் காத்திருக்கும் போது பலருக்கும் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்த போது ஆபத்பாண்டவனாக எங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் சில தமிழ் குடும்பத்தினர் சென்னையிலிருந்து நாங்கள் தங்கியிருந்த அந்த ஹேட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.
தென்னிந்திய உணவுகள் கிடைக்கும் என்று நம்பி சென்ற எங்களுக்கு அதிர்ச்சி அன்றைய தினம் பல சமையல் கலைஞர்கள் வேலைக்கு வரவில்லை என்பது தான். ஆனால் ஆச்சர்யம்… சென்னையிலிருந்து வந்த குழுவினர் அவர்களுடன் ஒரு திறம் வாய்ந்த சமையல்காரரையும் அழைத்து வந்திருக்கின்றனர். செட்டிநாடு சமையல் நிபுணராம். இந்தியாவில் கோழிகளுக்கா பஞ்சம். நாளையிலிருந்து கவலைப்படாதீங்க என அவர் கூரிய போது தான் கடவுள் எங்களுக்காகவே அவர்களை அனுப்பி வத்திருக்கிறார் என புரிந்து கொண்டோம்.
மாலை நேரத்தில் ஹோட்டல்காரர் சிக்கன் வாங்க உதவினார். எதற்கும் தயாராக முன்னேற்பாடாகக் கொண்டு செல்லலாம் என நினைத்து காங்கேயத்திலிருந்து நாங்கள் எடுத்து வந்த கிச்சடி பொன்னி அரிசியினை அவர்களுக்கு அளிக்க அவர்கள் கொண்டு வந்த மசாலாக்கள் சேர்த்து ஒரு அருமையான “செட்டி நாடு சிக்கன் குழம்புடன்” அருமையான பொலிவான தும்பைபூ போன்ற வெண்மையான அரிசி சாதம் தயாரான போது அந்த சந்தோசத்தினைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
அடுத்தடுத்த நேரங்களில் சுவையான அரிசி சாதம், சப்பாத்தி, உருளைக்கிழங்கு பொரியல், சாலட், முட்டை என வகை வகையான தென்னிந்திய உணவுகளுடன் வட கிழக்கு இந்தியாவின் மழை வாழ் மக்களின் உணவுகளையும் ருசித்ததை விட வேறென்ன சொர்க்கமாய் இருந்திட முடியும். அஸ்ஸாம் ஒரு சொர்க்க பூமி. எதிர்பாராமல் கிடைத்த இந்த உதவிக்கு கடவுளுக்கு நன்றி சொல்லி அக்குழுவினருக்கும் நன்றி சொல்லி மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம்.