கொலம்பியா நாட்டின் அமேசான் வனப்பகுதியில் இருந்து ஒரு தம்பதி 11 மாத குழந்தை உட்பட 4 மகன்களுடன் சிறிய ரக விமானத்தில் கடந்த மே 1-ம் தேதி அமேசான் காட்டுப் பகுதிக்கு மேலே பறந்து சென்ற போது கிட்டத்தட்ட 170 கிலோமீட்டர் தூரத்தில் விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கியது. இதில் 11 மாத குழந்தை, 4, 9, 13 வயதுள்ள சிறுவர்கள் மட்டும் உயி பிழைத்துள்ளனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த கொலம்பிய அரசு உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களையும் 80க்கும் மேற்பட்ட உள்ளூர் பழங்குடியின மக்களையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தியது. இரண்டு வாரங்கள் கழித்து விமானத்தின் நொறுங்கிய பாகங்களும் இறந்தவர்களின் உடல்களையும் மீட்புப் படையினர் கண்டெடுத்து குழந்தைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
இயற்கையுடன் இணைந்து வாழ்வது எப்படி என்ற வாழ்வியலை அக்குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி இருவரும் கற்றுத் தந்துள்ளனர். காட்டுக்குள் எப்படி உயிர் வாழ்வது, காயம் அடைந்திருந்தால் எப்படி இலை தழைகளை வைத்து மருந்து போடுவது, பூச்சி கடியில் இருந்து எப்படி தப்பிப்பது என குழந்தைகளுக்கு அவர்கள் கற்றுத் தந்தது உண்மையில் நம் அனைவருக்குமான ஒரு மிகப் பெரிய பாடம்.
விமானம் விபத்துக்குள்ளான நிலையில் மரவள்ளி கிழங்கு வகை மாவு அவர்களிடம் இருந்துள்ளது. அதை வைத்து கொஞ்ச கொஞ்சமாக சாப்பிட்டுள்ளனர். இந்த மாவு அவர்களுக்கு தேவையான ஆற்றலை தந்துள்ளது. காட்டில் கிடைத்த பழங்கள், விதைகளையும் சாப்பிட்டு உயிர் பிழைத்து வந்துள்ளனர்.
அடர்ந்த அமேசானில் சுமார் 40 அடி வரை வளர்ந்திருக்கும் ஒவ்வொரு மரமும் புதர்களும் கனமழையும் கொடிய விலங்குகளின் நடமாட்டமும் தேடுதல் வேட்டையை கடினமாக்கியது. ஹுய்டோடோ (Huitoto) பழங்குடி இனத்தைச் சேர்ந்த இக்குழந்தைகளுக்கு அம்மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதால் ”காட்டுக்குள் அனைவரும் ஒரே இடத்தில் இருங்கள்” என்று பாட்டி சொன்ன ஆடியோ ரெக்கார்டிங்கை மீண்டும் மீண்டும் ஹெலிகாப்டரில் இருந்து ஒலிபரப்பியுள்ளனர் தேடுதல் குழுவினர். அதன் பலனாக 40 நாட்கள் கழித்து 11 மாத குழந்தை உட்பட 4 சகோதரர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
குழந்தைகளின் பாட்டி குழந்தைகளை பத்திரமாய் காத்த பூமித்தாய்க்கு நன்றி கூறி “குழந்தைகளின் தாய் வேலையிலிருக்கும் போது 13 வயதான மூத்த குழந்தை மற்ற 3 சகோதரர்களையும் பொறுப்புணர்வுடன் பார்த்துக் கொள்வான். அதுவே அவர்கள் உயிர் பிழைக்க உதவியாய் இருந்துள்ளது” என்றாராம்.
குழந்தைகள் மீட்கப்பட்ட தகவல் அறிந்து கொலம்பிய அதிபர் அவர்கள் ”இக்குழந்தைகள் காட்டின் குழந்தைகள் ஆவர். இந்த காடு அவர்கள் காப்பற்றியது. இப்போது அவர்கள் கொலம்பியாவின் குழந்தைகள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அசாதாரன சூழலை தாக்கு பிடித்து ஒரு பச்சிளம் குழந்தையினைத் தூக்கிக் கொண்டு சகிப்புத்தன்மையுடன், மன உறுதியுடன் 40 நாட்கள் உலகின் ஆபத்தான காடுகளில் ஒன்றான அமேசானின் கடினமான இந்த நூற்றாண்டின் சிறந்த ஒரு நிகழ்வும் படிப்பிணையும் ஆகும்.