உப்பும் உடல் நலமும்
உணவின் சுவைக்கு மிக முக்கியமானது உப்பு. உப்பை அளவோடு சாப்பிடுவது நம் உடல் நலத்துக்கு நல்லது.
உப்பு என்பது சோடியம் குளோரைடு (NACL). உப்பில் 40% சோடியமும், 60% குளோரைடும் உள்ளது. சோடியம், குளோரைடு, இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், அயோடின், சிலிகான் போன்ற உப்புகளும் உடலுக்கு தேவையானது.
உப்பு உடலில் அதிகமாகும்போது கால்சியம் இயல்பாகக் குறையும். இதனால் கண்ணில் புரை நோய் ஏற்படலாம். எனவே உப்பை அளவோடு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. உப்பினை குறைவாக உபயோகிக்கச் சொல்லி மருத்துவர்கள் நம்மை எச்சரிப்பது இது போன்ற பல காரணங்களால் தான்.
நம் உடலுக்குத் தேவையான உப்பின் அளவு என்பது நம் உடல் வெளியிடும் சோடியத்தின் அளவைப் பொருத்தது. அதிக உடற்பயிற்சி, உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு வியர்வையின் மூலம் சோடியம் அதிகமாக வெளியேறுகிறது. அவர்களுக்கு அதிகமான சோடியத் தேவை இருக்கும். மற்றவர்களுக்கான சோடியத்தின் தேவை குறைவானதே.
சிறுநீரகப் பிரச்னைகள்:
அதிக அளவிலான சோடியம் சிறுநீரகத்தைத் தாக்குகிறது. இதனால் சிறுநீரகக் கல் உருவாதல், சிறுநீரகம் பழுதடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. சிறுநீரினை அதிகம் கட்டுப்படுத்தாமல் வெளியேற்றிவிடுவதன் மூலம் சோடியம் கலந்த சிறுநீர் அதிக நேரம் உடலில் தேங்காமல் காப்பதன் மூலம் சிறுநீரகம் பாதிப்படைவதைத் தவிர்க்கலாம்.
எலும்புப் பிரச்னை:
கால்சியம் சத்துகள் எலும்பில் தான் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால் அதிக சோடியமானது எலும்பில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சி எலும்பினை அரித்து வலுவிழக்கச் செய்து மூட்டு வலி, முதுகு வலி , எலும்பு முறிவு, எலும்பு உறுதியின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றது.
அதீத தாகம்:
அதிக சோடியம் நிறைந்த உணவுகளை உண்ணும் போது, அது உடலின் திரவ சமநிலையை பாதிப்பதன் மூலம், தாகத்தை ஏற்படுத்துகிறது. அதிகளவு நீரைக் குடிப்பது இதற்கான சிறந்த வழி.
உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம். உணவில் சேர்க்கும் உப்பின் அளவைப் பாதியாக குறைத்தால் ரத்த அழுத்தமும் குறையும். உப்பு உடலில் அதிகரிக்கும் பட்சத்தில் இருதய சுவரில் வீக்கம், வயிற்றுப் புண், சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இரத்தத்திலும் உப்புச் சத்து அதிகரிக்கிறது. எலும்பின் அடர்த்தியும் குறைகிறது. உப்பு சத்து அதிகமானால் எதிர்ப்பு சக்தி குறையவும் வாய்ப்புண்டு. மேலும் ரத்தத்தில் யூரியா மற்றும் யூரியா அமில சத்துக்களும் அதிகரிக்கும்.
உணவில், சாப்பிடும் போது உப்பு துாவி சாப்பிடக் கூடாது. இது ஆபத்தானது. சமைத்து முடித்த பிறகு உணவில் உப்பை சேர்க்கும் போது, அதில் உள்ள இரும்பு சத்து அப்படியே காணப்படும். இதனால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. சமைக்கும் போது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடும் போது, அதிலுள்ள இரும்புச் சத்தினை நமது உடல் மிக எளிதாக ஏற்றுக்கொள்கிறது.
உப்பை திறந்து வைத்திருந்தால் அது நீர்த்துப் போக வேண்டும். கல் உப்புக்கு மட்டும் தான் அக்குணம் உள்ளது. ஒரு தேக்கரண்டி பொடி உப்பில் 2300 மில்லிகிராம் சோடியம் உள்ளது. ஆனால் கல் உப்பில், 2000 மில்லிகிராம் சோடியம மட்டுமே உள்ளது. இதனால் தான், கல் உப்பு நல்லது என பலரும் சொல்கின்றனர்.
ஒரு நபர் ஒரு நாளைக்கு 3 கிராம் அளவுதான் உப்பைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் 10.9 கிராம் வரை உப்பைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பாக்கெட்டுகளில் அடைத்து விற்க்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கும் முன் பாக்கெட்டின் பின்புறம் அச்சிடப்பட்ட சோடியத்தின் அளவைப் பொருத்தே உட்கொள்ள வேண்டும்.
மேற்கூறிய தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாய் இருப்பின், இப்பக்கத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். பூ போன்ற சாதத்திற்கு காங்கயம் மலர் அரிசியினை உபயோகிக்கவும்.
மலரட்டும் ஆரோக்கியம்!